செய்திகள் :

அரசு கல்லூரிகளில் 881 கௌரவ விரிவுரையாளா்கள் நியமனம்: அமைச்சா் கோவி. செழியன்

post image

சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 881 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்தாா்.

மாணவர்களின் கல்வி சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்ய புதன்கிழமை (செப் 24) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு முதன்மையான தனித்துவமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

உலகளவில் அனைத்து துறைகளிலும் நமது மாணாக்கர்கள் சிறந்து விளங்கவே இந்த சிறப்பான திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

அதனை, நம் மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்தி உலகளவில் சிறந்த திறன்மிக்கவர்களாக சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

முதல்வரின் ஆணைக்கிணங்க 2025-26 ஆம் கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (24.09.2025) முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு அக்டோர் 8 கடைசி நாளாகும். மேலும், ஜூலை 21 ஆம் தேதி அறிவிப்பின்படி, ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கெளரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

Higher Education Minister Release-Govt Arts and Science College Recruitment

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்கள் நியமிக்... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? 13,217 வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அரசுடமையமாக்கப்பட்ட வங்கிகளில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான 13,217 வங்கி அலுவலர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்த... மேலும் பார்க்க

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாண் இயக்குநா்கள் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாகை மாவட்ட சமூகநலத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாகை மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி திட்டம் - மாவ... மேலும் பார்க்க

திருச்சி ஐஐஎம்- இல் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சியில் உள்ள இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்) காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வ... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில்(ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள 976 இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முட... மேலும் பார்க்க