லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!
லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், லடாக்கில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.