செய்திகள் :

மதுரை: "ரஜினி படம் தவிர வேற படம் பார்க்க மாட்டோம்" - ரஜினிக்கு கோயில் கட்டி, கொலு வைத்த தீவிர ரசிகர்

post image

மதுரை திருமங்கலம் பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக், நடிகர் ரஜினி காந்த்தின் தீவிர ரசிகர். ரஜினிக்கு கோயில் கட்டியுள்ளார். அதில் ரஜினிக்கு இரண்டு கற்சிலைகளை வைத்து தினமும் பூஜை செய்து வருகிறார். இத்தகைய பக்தியின் பின்னனி குறித்து அவரிடம் பேசியபோது கூறியது

"சிறு வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகன் நான். படையப்பா படம் பார்த்துவிட்டு வந்த அன்றுதான் எனக்கு துணை ராணுவத்தில் பணி கிடைத்தது. அன்றிலிருந்து ரஜினிதான் எனக்கு கடவுள் அவர் படம் எப்ப ரிலீஸ் ஆனாலும் உடனே போய் பாத்திடுவேன். என் மனைவி மகளும் அப்படித்தான். நாங்கள் மூவருமே ரஜினி படம் தவிர வேறு யாருடைய படமும் பார்ப்பதில்லை.

ரஜினிகாந்த்திற்கு வைக்கப்பட்டுள்ள கற்சிலை
ரஜினிகாந்த் சிலை

ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு வந்த பொழுது என் கடவுளுக்கு ஏதாச்சும் பண்ணனும்னு தோணுச்சு. கடவுள்னா சிலை இல்லாம எப்டினு ரொம்ப கஷ்டப்பட்டு கருங்கல்லுல சிலை செஞ்சு கோவில் மாறி சிலையைப் பிரதிஷ்டை செஞ்சோம். உயிரோட இருக்கவங்களுக்கு யாரும் கருங்கல்லுல சிலை செய்ய மாட்டோம்னு சொல்லிட்டாங்க. ரொம்ப பேசி கன்வின்ஸ் பண்ணி மாமல்லபுரத்துல உள்ள சிலை செய்பவர்களிடம் பேசி சிலை பண்ணினேன். அந்தச் சிலையில் முழு திருப்தி இல்லாததால் அடுத்த வருடம் மற்றொரு சிலை செய்து வைத்தேன்.

தினமும் இரண்டு வேளை பூஜை செய்து செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பால், பனீரால் அபிஷேகம் செய்து வருகிறேன். கோவிலின் எல்லா திசைகளும் ரஜினி தான் தெரிய வேண்டும் என 360°-ல் ரஜினி புகைப்படங்களை ஒட்டி வடிவமைத்தேன்.

எந்த ரசிகரும் செய்யதாத நாம செய்யணும்னு நெனச்சேன். எந்த நடிகருக்கும் கருங்கல்லுல சிலை இல்லை ரஜினிக்கு மட்டும்தான் வச்சிருக்கேன்.

ரஜினி காந்த்துடன் கார்த்திக் குடும்பம்
ரஜினி காந்த்துடன் கார்த்திக் குடும்பம்

இத பார்த்திட்டு ரஜினி சார் கூப்பிட்டாங்க எங்கள பார்க்கணும்னு. இந்த வருடம் ஜனவரி -2ம் தேதி ரஜினி சார் பார்க்க போனோம். 45 நிமிடம் எங்களிடம் பேசினார். எங்கள் வாழ்நாள் பலனை அடைந்த ஒரு மனநிறைவு எங்களுக்கு.

மக்களும், ரசிகர்களும் எல்லோரும் வந்து கோவிலைப் பார்த்துட்டு போறாங்க. ரஜினி ஒரு டைம் வந்து பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். எங்க போனாலும் ரஜினி போஸ்டர் இல்ல, அவரு பேரு இருந்த கூட நின்னு என்ன ஏதுன்னு பார்த்துட்டுதான் போவேன். 48 வருஷமா ரஜினி படம் மட்டும்தான் பார்த்துட்டு இருக்கேன். ஒரு நாள்ல ஒரு டைம் ஆச்சும் ரஜினி பேர சொல்லாம என் நாள் கழிஞ்சதே இல்ல.

ரஜினி காந்த் சிலை
ரஜினி காந்த் கொலு
ரஜினி காந்த் கொலு

ஒவ்வொரு விஷேசத்துக்கு ஏத்தமாறி கோவில அப்டேட் பண்ணுவோம். இது நவராத்திரி காலம். அது மட்டும் இல்லாம ரஜினி சினிமாக்கு வந்து 50 வருசம் ஆனது கொண்டாடுறதுக்கும் அவருக்கு கொலு வச்சுருக்கோம். கொலு பாக்க வர்ற எல்லாத்துக்கும் ஒரு டைரியும் ஸ்விட் பாக்ஸ்-ம் கொடுக்கிறோம்.

ரஜினி சார் அண்ணன் பொண்ணு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போனாங்க. அவரு வந்து ஒரு டைம் கோவில பாத்துட்டா மேலும் மன நிறைவா இருக்கும்" என்றார்.

Idly Kadai: "மதுரை துலுக்க நாச்சியார் கோயிலில் மதநல்லிணக்கம்" - நடிகர் பார்த்திபன்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

Shwetha Mohan: ``இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன்!" - கலைமாமணி விருது குறித்து ஸ்வேதா மோகன்

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Kalaimamani Award: `கோடான கோடி நன்றிகள்' - கலைமாமணி விருது குறித்து நெகிழும் எஸ்.ஜே. சூர்யா

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: 'அந்த ஈரம் இன்றும் என் மனதில் இருக்கிறது' - இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சி

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, ... மேலும் பார்க்க

``ஒருவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை'' - ஏ.ஆர். ரஹ்மான் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் ... மேலும் பார்க்க