செய்திகள் :

Kalaimamani Award: `கோடான கோடி நன்றிகள்' - கலைமாமணி விருது குறித்து நெகிழும் எஸ்.ஜே. சூர்யா

post image

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும்.

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

சினிமா துறையிலிருந்து 2021-ம் ஆண்டுக்கு நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கும், 2022-ம் ஆண்டுக்கு நடிகர்கள் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கும், 2023-ம் ஆண்டுக்கு நடிகர்கள் மணி கண்டன், மரியம் ஜார்ஜ், நடன இயக்குநர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து படப்பிடிப்பு என பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா தனக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர், ``கோடான கோடி நன்றி! என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

என் அன்பும் ஆருயிருமான என் ரசிகப் பெருமக்களுக்கும், இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Shwetha Mohan: ``இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன்!" - கலைமாமணி விருது குறித்து ஸ்வேதா மோகன்

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: 'அந்த ஈரம் இன்றும் என் மனதில் இருக்கிறது' - இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சி

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, ... மேலும் பார்க்க

மதுரை: "ரஜினி படம் தவிர வேற படம் பார்க்க மாட்டோம்" - ரஜினிக்கு கோயில் கட்டி, கொலு வைத்த தீவிர ரசிகர்

மதுரை திருமங்கலம் பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக், நடிகர் ரஜினி காந்த்தின் தீவிர ரசிகர். ரஜினிக்கு கோயில் கட்டியுள்ளார். அதில் ரஜினிக்கு இரண்டு கற்சிலைகளை வைத... மேலும் பார்க்க

``ஒருவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை'' - ஏ.ஆர். ரஹ்மான் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் ... மேலும் பார்க்க

ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? - ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் நி... மேலும் பார்க்க