செய்திகள் :

லடாக்கில் வெடித்த மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி!

post image

லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து, அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போராட்டத்தில், வெடித்த வன்முறையால் லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் போலீஸாரின் வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோதல்களில் 4 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில்தான் 4 பேரும் பலியானார்கள் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, லடாக்கில் செப்.10 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து 15 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், 2 பேரது உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதையும் படிக்க: 7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!

In Ladakh, 4 people have been reported killed in police firing on protesters.

மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!

கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா இன்று (செப். 24) காலமானார். அன்னாரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த ஞானம் வாய்ந... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்... மேலும் பார்க்க

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..தில்லியில் உள்ள விக்ஞான் பவனில்... மேலும் பார்க்க

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.கடந்த 2019-இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால்... மேலும் பார்க்க

7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!

தசராவையொட்டி சுமார் 7,800 விழாக் குழுக்களுக்கு மாநில அரசு நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “க... மேலும் பார்க்க

கொல்கத்தா இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்: ராகுல்

மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்ததோடு, இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசை அவர் வலிய... மேலும் பார்க்க