'என் அன்பு நண்பர் லாலேட்டனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்'- மோகன் லாலை வாழ்த்தி...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 88.71 ஆக நிறைவு!
மும்பை: அதிக கட்டணங்கள் மற்றும் அதிபர் டிரம்ப் எச்1பி விசா மீதான கட்டணமாக 1 லட்சம் டாலரை அறிவித்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பானது கடந்த சில நாட்களாக வெகுவாக வீழ்ச்சியடைந்து வரலாற்று குறைந்தபட்ச அளவில் முடிந்தது.
வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்டவையால் இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளாதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.88.71ஆக முடிவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.80 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இறுதியாக அதன் முந்தைய முடிவை விட 2 காசுகள் உயர்ந்து ரூ88.71ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 45 காசுகள் குறைந்து ரூ.88.73 என்ற வரலாற்று குறைந்தபட்ச அளவில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: தொடர்ந்து 4-வது நாளாக சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!