சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? - ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்
ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவருக்கு ஏற்கெனவே வாழ்த்துகள் தெரிவித்துவிட்டதாகக் கூறினார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சிறப்பாக செல்வதாக பேசியவர் ரிலீஸ் தேதி குறித்தும் அப்டேட் செய்தார்.
ரஜினிகாந்த் கூறியதன்படி, 2026 ஜூன் மாதத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஜூன் 12ல் ரிலீஸ் இருக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்றுள்ளது. பாகம் ஒன்றின் அதே படக்குழு மீண்டும் இணைந்துள்ளது.

'ஜெயிலர்' ரஜினியின் திரைப்பயணத்தில் அதிக வசூலை ஈட்டிய படமாகும். பாக்ஸ் ஆபீஸில் 650 கோடிக்கு மேல் வசூலை குவித்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'ஜெயிலர் 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.