செய்திகள் :

இந்திய கேப்டனின் கிண்டல்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கூறியதென்ன?

post image

பாகிஸ்தான் அணி குறித்த இந்திய கேப்டனின் கிண்டலான கருத்துக்கு அந்நாட்டின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ஃரிடி பதிலளித்துள்ளார்.

சூர்யகுமாரின் கருத்து அவருடையது எனப் பொறுமையாக பதிலளித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணியினர் ஆசிய கோப்பையில் விளையாடும்போது பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக சூர்யகுமார் கைக் குலுக்குவதை தவிர்த்து விட்டார்.

இந்தப் பிரச்னை பெரியதாக பேசப்பட்டது. இருப்பினும் இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் 2 முறையும் பாகிஸ்தானை வென்றுள்ளது.

இது குறித்து சூர்யகுமார் யாதவ், “இனிமேல் பாகிஸ்தான் அணியை எங்களது போட்டியாளர் எனக் கூறாதீர்கள். 7-8 அல்லது 10-9 என இருந்தால்தான் அது போட்டியே. 10-0 அல்லது 11-0 என இருந்தால் எப்படி சொல்ல முடியும்?” எனக் கிண்டலாக பேசியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ஷாஹீன் ஷா அல்ஃரிடி பேசியதாவது:

அந்தக் கருத்து அவருடையது. அதை அவர் தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் இறுதிப் போட்டியில் சந்தித்தால், பார்க்கலாம் என்ன நடக்கிறதென.

நாங்கள் இங்கு ஆசிய கோப்பையை வெல்லவே வந்திருக்கிறோம். அதற்கான முழுமையான உழைப்பைக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

பாகிஸ்தான் அணி இலங்கையை வென்று சூப்பர் 4 சுற்றில் நல்ல நிலையில் இருக்கிறது. அடுத்து வங்கதேசத்தை வென்றால், நிச்சயமாக இறுதிப் போட்டிக்கான வாய்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan pace spearhead Shaheen Shah Afridi steered clear of giving a direct response to Suryakumar Yadav's view that Indo-Pak games should not be considered a rivalry anymore due to India's dominance and insisted that his team's focus is on winning the Asia Cup.

இந்தியாவுடன் தோற்றதால்... மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!

இலங்கை அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்ற பாகிஸ்தான் வீரர் ஹுசைன் தலத் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதினால் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை எனக் கூறியுள்ளார். முத... மேலும் பார்க்க

சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!

இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் 19 வயதுக்... மேலும் பார்க்க

லெஜன்ட்ரி கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்!

இங்கிலாந்தைச் சேர்ந்த லெஜன்ட்ரி நடுவர் ஹரால்டு டிக்கி பேர்ட் செவ்வாய்க்கிழமை(செப்.23) காலமானார். அவருக்கு வயது 92.கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தைச் சேர்ந்த நடுவர் டிக்கி பே... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் அஸ்வின்!

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர். அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் ... மேலும் பார்க்க

900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!

டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன... மேலும் பார்க்க

அமெரிக்காவின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தது ஐசிசி!

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் நிலையில், அமெரிக்க அணிக்கு... மேலும் பார்க்க