செய்திகள் :

லெஜன்ட்ரி கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்!

post image

இங்கிலாந்தைச் சேர்ந்த லெஜன்ட்ரி நடுவர் ஹரால்டு டிக்கி பேர்ட் செவ்வாய்க்கிழமை(செப்.23) காலமானார். அவருக்கு வயது 92.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தைச் சேர்ந்த நடுவர் டிக்கி பேர்ட் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.

இங்கிலாந்தின் யார்க்‌ஷயரின் பர்ன்ஸ்லே பகுதியில் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி பிறந்தவரான இவர், 1956 முதல் 1965 வரை யார்க்‌ஷயர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 3314 ரன்கள் குவித்துள்ளார். இதில், இரண்டு சதமும் அடங்கும்.

தன்னுடைய 32 வயதில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு, 1970 முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற துவங்கினார்.

அப்போதைய காலகட்டத்தில் அந்தளவிற்கு நவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதும் துல்லியமான முடிவுகளைக் கொடுத்ததில் டிக்கி சிறப்பு பெற்றவர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராகப் பணியாற்றிய டிக்கி, 66 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளும் அடங்கும். மேலும், ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் முதல் மூன்று இறுதிப் போட்டிகளுக்கு இவர் நடுவராகப் பணியாற்றிய பெருமையும் பெற்றுள்ளார். அதன்பின்னர், யார்க்‌ஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் தலைவராக 2014ல் பணியாற்றி உள்ளார்.

1996 ஆம் ஆண்டில் லார்ட்ஸ்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் டிக்கிக்கு பிரியாவிடை அளித்தனர்.

டிக்கி பேர்டின் மறைவுக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், டிக்கி பேர்ட் நடுவராகப் பணியாற்றிய கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியில்தான் இந்திய அணியின் ஜாம்பவான்கள் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Legendary umpire Dickie Bird passed away

இதையும் படிக்க... 900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!

சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!

இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் 19 வயதுக்... மேலும் பார்க்க

இந்திய கேப்டனின் கிண்டல்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கூறியதென்ன?

பாகிஸ்தான் அணி குறித்த இந்திய கேப்டனின் கிண்டலான கருத்துக்கு அந்நாட்டின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ஃரிடி பதிலளித்துள்ளார். சூர்யகுமாரின் கருத்து அவருடையது எனப் பொறுமையாக பதிலளித்துள்ளார். இந்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் அஸ்வின்!

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட ஆர். அஸ்வின் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் ஆர். அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் ... மேலும் பார்க்க

900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!

டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன... மேலும் பார்க்க

அமெரிக்காவின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தது ஐசிசி!

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் நிலையில், அமெரிக்க அணிக்கு... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இந்தியா, வங்கதேசத்துடன் புதன்கிழமை மோதுகிறது.இச்சுற்றில் இரு அணிகளுக்குமே இதுவரை தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் வெல... மேலும் பார்க்க