"குடியரசுத் தலைவருக்குப் பிடித்த என்னுடைய இரண்டு திரைப்படங்கள்"-நடிகர் மோகன் லால் நெகிழ்ச்சி
71-வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று (செப் 24) டெல்லியில் நடைபெற்றது.
தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ராம் குமார் என விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் இந்த நிகழ்வில் பெரு மகிழ்ச்சியோடு கலந்துகொண்டு விருது பெற்றனர்.
தாதா சாகேப் விருது பெற்ற மோகன் லால், "மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த தேசிய அடையாளத்தை பெறும் இளமையான நடிகர் மற்றும் எங்கள் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் நான்தான். இந்தத் தருணம் எனக்கானது மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மலையாள திரை சமூகத்திற்கானது." என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து, கொச்சி வந்தடைந்த மோகன் லால், விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, "விருதைக் கொடுக்கும்போது குடியரசுத் தலைவர் என்னுடைய 'Vaanaprastham', 'karnabharam' படங்களைக் குறிப்பிட்டு பேசியிருந்தது பெருமையாக இருந்தது. அந்த இரண்டு படங்களுமே செம்மையான திரைப்படங்கள்.

ஒன்று சமஸ்கிருத நாடகம், மற்றொன்று மூன்று கோணங்களைக் கொண்ட நாடகம். நடிகர்கள் பலரும் இந்த மாதிரியான படங்கள் ஏதும் பெரிதாக நடிக்கவில்லை. அதானாலோ என்னவோ இந்த இரண்டு படங்களும் இன்றும் தனித்து நிற்கின்றன, பேசப்படுகின்றன" என்று பேசியிருக்கிறார் மோகன் லால்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...