சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்காக டி20 தரவரிசைப் பட்டியல் இன்று(செப்.24) வெளியிடப்பட்டது.
ஆசியக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, முதல் முறையாக ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
உலகளவில் 6-வது வீரராகவும், இந்தியளவில் 3-வது வீரராகவும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி(909), சூர்யகுமார் யாதவ் (912) ஆகியோருக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா(907) புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் அபிஷேக் சர்மா, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 174 ரன்கள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.