அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம்: அமைச்சர் எ.வ. வேலு ஹைதராபாத்தில் ஆய்வு!
Bangkok: தீடீரென சாலையில் ஏற்பட்ட 164 அடி பள்ளம்; தாய்லாந்து அரசு சொல்லும் காரணம் என்ன?| viral video
திடீரென சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். நம் நாட்டிலும் கூட திடீரென சிறு சிறு பங்கள் ஏற்படுவதுண்டு.
ஆனால், தாய்லாந்தின் துசிட் மாவட்டத்தில் உள்ள சாம்சென் சாலையில், சுமார் 900 சதுர மீட்டர் பரப்பளவில் 50 மீட்டர் ஆழம் (164 அடி) பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பாங்காக்கின் ஆளுநர் சாட்சார்ட் அளித்த தகவலின்படி, ``பாங்காக்கின் துசிட் மாவட்டத்தில் உள்ள வஜிரா மருத்துவமனைக்கு முன்னால் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
நோயாளிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, 'வெளிநோயாளி சேவைகள்' தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
Sudden road collapse shocks Bangkok, leaving a massive Sinkhole.
— Anunay (@anunay_24) September 24, 2025
A stark reminder that nature is unpredictable.
#Bangkok#Sinkholepic.twitter.com/fKmDcyl1L8
இந்தப் பள்ளம், நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதையில் உள்ள கூரை 'சேதமடைந்து விழுந்ததின் விளைவாக ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் சிறிதளவு மண் சரிந்தது, அது பெரிய பள்ளமாக மாறி, தொடர்ந்து இடிந்து விழுந்திருக்கிறது.
அதனால், அருகிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்போ, யாருக்கும் காயமோ இல்லை.
தண்ணீர் கொண்டுச் செல்லும் குழாய் உடைந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. உரிய அதிகாரிகள் அந்தப் பகுதியை ஆராய்ந்து வருகின்றனர்.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதை கூடிய விரைவில் சரி செய்வோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.