ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இ...
``இந்த டிரஸ் எல்லாம் போட்டு வரக்கூடாது'' - கோவை கல்லூரி மாணவியை திட்டிய பூ வியாபாரிகள்
கோவை ஆர்எஸ்புரம் அருகே பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் மலர்க் கடைகள் உள்ளன.
கோவை முழுவதும் இருந்து அங்கு தினசரி ஏராளமான மக்கள் பூ வாங்க செல்வார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டக்கல்லூரி மாணவி ஜனனி பூ வாங்கச் சென்றுள்ளார். அவர் ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்திருந்த காரணத்தால், அங்குள்ள ஒரு பூக்கடை உரிமையாளர் அவரை திட்டியுள்ளார்.
“பூ மார்க்கெட்டுக்கு இப்படி எல்லாம் உடை அணிந்து வரக்கூடாது.” என்று அவர் ஜனனியிடம் கடுமையாகப் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர், “என் உடை சரியாகத்தான் இருக்கிறது. உங்கள் பார்வையைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.”

இங்கு இந்த உடை அணிக் கூடாது என்று யார் கூறியது. உங்களின் உடைக் கூடத்தான் சரியில்லை.” என்று கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜனனி தரப்பில் இதை வீடியோ பதிவு செய்தனர்.
அப்போது அங்கு வந்த சக வியாபாரிகள், அந்தப் பெண்ணை மிரட்டி செல்போனைப் பறித்துக் கண்டித்துள்ளனர். இதில் ஒருவர் திமுக நிர்வாகியான எம்எஸ்டி சாமி தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக ஜனனி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதேபோல ஜனனி மற்றும் அவரது நண்பர் மீது பூ வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.