மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!
விஜய் என்ன சொல்றது... திமுகவை எங்கள் கூட்டணியால் தான் வீழ்த்தமுடியும் - வானதி சீனிவாசன் பளிச்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜிஎஸ்டி வரி குறைப்பால் வியாபாரம், பொருளாதாரம் வளரும். வரி குறைப்பினால் உற்பத்தி பெருகும். மக்களுக்கு உதவி செய்ய மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு அமல்படுத்துவதை மாநில அரசுதான் செய்ய வேண்டும். ஆனால் முதலமைச்சர் பேசாமல் வேடிக்கை பார்க்கிறார்.
கடந்த காலங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்தது. அதன் காரணமாகதான் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க முடிந்தது. காங்கிரஸ் போல ஊழல் புரியாமல், ஜிஎஸ்டி வருமானத்தை மக்களுக்கே திரும்ப தருகிறோம். வரியே வேண்டாம் என்றால் அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த முடியும்.

வரி கட்டுவது பெருமை என்பதை மோடி கொண்டு வந்துள்ளார். மாநில அரசு ஒத்துழைப்பு தந்தால் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவோம்.
திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய்தான் கூறுகிறார். திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தான் திமுகவை வெல்ல முடியும்.

பாஜகவில் எந்த கோஷ்டி பூசலும் இல்லை. கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் தலைமை கூறியுள்ள விஷயம். அதனை பலவீனப்படுத்தும் செயல்களை யாரும் செய்யக்கூடாது.” என்றார்.