செய்திகள் :

திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா? ராகுல் கேள்வி

post image

திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கி இருப்பதை ராகுல் விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் மூலம் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக சான்றுகளை வெளியிட்டு, கடந்த மாதம் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கே தெரியாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை சிலர் நீக்க முயற்சி மேற்கொண்டதாக கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

ராகுலின் குற்றச்சாட்டு

”கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,000 -க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அவர்களுக்கே தெரியாமல் நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக வெளிமாநில தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்காளரின் உள்நுழைவு பயன்படுத்தப்பட்டு, 14 நிமிடங்களில் 12 பேரின் பெயர்கள் நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மனிதரால் இவற்றை செய்ய இயலாது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்துள்ளனர்.

இதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் கோரி கர்நாடக சிஐடி பலமுறை கடிதம் அளித்தும் பதில் இல்லை” என்று ராகுல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும் புதிய பெயரை சேர்க்கவும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி சரிபார்ப்பை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடர்பான செய்தியை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “ஞானேஷ் ஜி, (தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்) நாங்கள் திருட்டைப் பிடித்த பிறகுதான் பூட்டுப் போட ஞாபகம் வந்ததா? திருடர்களையும் பிடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடக சிஐடி-க்கு எப்போது ஆதாரங்களை கொடுக்கப் போகிறீகள் என்பதை சொல்லுங்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Opposition leader Rahul Gandhi has questioned the Chief Election Commissioner whether he remembered to lock, only after the theft was caught.

இதையும் படிக்க : வாக்காளர் பெயரை நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கட்டாயம்!

கொல்கத்தா இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்: ராகுல்

மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்ததோடு, இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசை அவர் வலிய... மேலும் பார்க்க

ஏழை மாணவிகளே குறி: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின்கீழ் பிரபல சாமியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தில்லியில் செயல்படும் ஒரு மேலாண்மை படிப்புசார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளிடம் அந்நிறுவனத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு

புது தில்லி: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் 11.52 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி ... மேலும் பார்க்க

வாக்காளர் பெயரை நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கட்டாயம்!

வாக்காளர் அட்டையில் பெயரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.வாக்காளர்களுக்கு தெரியாமல் பெயர் நீக்கப்படுவதாக மக்களவை எத... மேலும் பார்க்க

லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!

லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது... மேலும் பார்க்க