செய்திகள் :

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

post image

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், அக். 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் படி, ஜம்மு - காஷ்மீர் (சட்டப்பேரவையுடன் கூடிய) மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

சட்டப்பேரவையுடன் கூடிய ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஆனால், தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், குலாம் நபி ஆசாத் உள்பட 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் காலியாக இருந்தன.

தற்போது ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் உள்ளதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ் அரோரா, பஞ்சாப் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில், பஞ்சாபில் காலியாக இருக்கும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டி நிலவும் பட்சத்தில் அக். 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Jammu and Kashmir, Punjab Rajya Sabha by-elections announced

இதையும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்

லடாக்கில் வெடித்த மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி!

லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டு... மேலும் பார்க்க

7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!

தசராவையொட்டி சுமார் 7,800 விழாக் குழுக்களுக்கு மாநில அரசு நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “க... மேலும் பார்க்க

கொல்கத்தா இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்: ராகுல்

மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்ததோடு, இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசை அவர் வலிய... மேலும் பார்க்க

ஏழை மாணவிகளே குறி: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின்கீழ் பிரபல சாமியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தில்லியில் செயல்படும் ஒரு மேலாண்மை படிப்புசார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளிடம் அந்நிறுவனத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ... மேலும் பார்க்க

திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா? ராகுல் கேள்வி

திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு ஆதார் எ... மேலும் பார்க்க