சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் கோயில் - இந்தியாவில் எங்கே இருக்கிறது தெரியுமா?
குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரத்தில் உள்ள ஒரு கோயில், நவராத்திரி பண்டிகையின் 9 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடி வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோயிலின் பின்னணி குறித்து இங்கே காண்போம்.
குஜராத்தின் ஜூனாகத்தில் உள்ள மங்கநாத் பஜாரில் உள்ள மங்கநாத் மகாதேவர் கோயில்தான், வருடத்திற்கு ஒருமுறை, நவராத்திரி நாட்களில் மட்டுமே திறக்கப்படுகிறது

இந்தக் கோயிலின் சன்னதியில் ஹிரகிரி மாதா உள்ளது. தவம், தியாகம் மற்றும் தெய்வீகத்தின் அடையாளமாக குஜராத்தின் ஜூனாகத்தில் அமைந்துள்ளது ஹிரகிரி மாதா கோயில். வட இந்தியாவிலிருந்து வந்து, கால்நடைகளுக்குச் சேவை செய்து, ஜீவன் சமாதி அடைந்த ஹிரகிரி மாதாவின் நினைவாக இந்தக் கோயில் அர்ப்பணிக்கபட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு மட்டுமே கோயில் திறக்கப்படுவதால், தொலைதூர ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் அணையா விளக்குக்கான எண்ணெயையும், ஆரத்திக்கான பிரசாதங்களையும் கொண்டு வந்து வழிபடுகின்றனர்.
இதனால் இந்த சன்னதி ஒரு சக்திவாய்ந்த நவராத்திரி புனித யாத்திரையாக விளங்குகிறது.
ஜூனாகத், குஜராத்தின் ஒரு முக்கிய ஆன்மிக நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற கிர்னார் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதி இந்து, சமண மற்றும் பௌத்த மதத்தினருக்கு ஒரு புனித யாத்திரை தலமாக விளங்குகிறது.
இத்தகைய ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரில், நவராத்திரியில் மட்டும் திறக்கப்படும் ஹிரகிரி மாதா கோயில் ஒரு தனித்துவமான வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.