Trump: ``ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" - பிரான்ஸ்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக, இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிபி-சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சகோதரர் கினோஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.