செய்திகள் :

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

post image

இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட செயலியை ரத்து செய்தாலும், புதிது புதிதாக முளைக்கும் செயலியை இயக்குவதும், மக்கள் அதைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான பணத்தை இழப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக மூன்று மாநிலங்களைச் சேர்ந்த எட்டு ஆப்ரேட்டர்களை தெலங்கானா சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா சிஐடி குழுக்கள் முதலில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாபில் உள்ள ஆறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு ஆப்ரேட்டர்களைக் கைது செய்ததாகக் கூடுதல் காவல் துறை இயக்குநர் (சிஐடி) சாரு சின்ஹா ​அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமிருந்து பல்வேறு ஹார்ட்வேர் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

The Telangana CID on Wednesday said it has apprehended eight operators from three states for conducting online betting through apps, where people allegedly lost huge money.

இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!

லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: ஒடிசா அரசு

ஒடிசாவில் வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே மாத சம்பளம் வழங்குமாறு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக மாத இறு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வேட்புமனுத் த... மேலும் பார்க்க

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

பெங்களூரில் கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலமாக ரூ. 14 லட்சம் மோசடி நடந்துள்ளது. விரைந்து புகார் அளித்ததன்பேரில் அவரது பணம் மீட்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டார். சோலப்பூர் மாவட்டத்தின... மேலும் பார்க்க

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

புது தில்லி: தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த தனியார் பொறியியல் மையத்தின் இயக்குநர் சைதான்யானந்த் சரஸ்வதி, 15 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாகியிருக்... மேலும் பார்க்க