செய்திகள் :

H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்

post image

தற்போது உலகம் முழுக்கவே H-1B விசா குறித்து பேச்சுகள் சுற்றி வருகின்றன.

கடந்த 22-ம் தேதி முதல், புதிய ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் செல்பவர்கள் 1 லட்சம் டாலர்கள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் ட்ரம்ப் அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த ஹெச்-1பி விசாவில் அதிக திறன் பெற்ற அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய துறைகளைச் சார்ந்தவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்தது.

H1B விசா
H1B விசா

இந்த விசா மூலம் அமெரிக்கா செல்லும் 67 சதவிகிதத்தினர் இந்தியர்கள், 11 சதவிகிதத்தினர் சீனர்கள், மீதி உள்ள சதவிகிதத்தினர் தான் பிற நாட்டினர்.

இதனால், இந்தியர்கள் பெருமளவில் பாதிக்க உள்ளனர்.

இனி மீண்டும் ஹெச்-1பி விசாவில் புதிய மாற்றம் ஒன்றை பரிந்துரைத்துள்ளது அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை.

இதுவரை, ஹெச்-1பி விசா லாட்டரி நடைமுறை மூலம் ஒதுக்கப்பட்டு வந்தன. இதை மாற்றி இனி ஹெச்-1பி விசாக்கள் 'Weighed' தேர்வு முறையில் வழங்கப்பட உள்ளது.

ஹெச்-1பி விசா லாட்டரி நடைமுறை என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இத்தனை பேருக்கு தான் ஹெச்-1பி விசா வழங்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை உண்டு. ஆனால், இந்த எண்ணிக்கைக்கும் மேல் தான் வழக்கமாக விசா விண்ணப்பங்கள் வந்து குவியும்.

அதனால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு விசாக்கள் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படும்.

அது தான் இப்போது மாற்றப்பட உள்ளது.

H-1B விசா - ட்ரம்ப் | இந்தியா, சீனா
H-1B விசா - ட்ரம்ப்

இனி எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

இனி ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்கள் அவர்களது ஊதியங்களுக்கு ஏற்ப நான்கு நிலைகளாக பிரிக்கப்படும்.

பின், நிலை 1 (குறைந்த சம்பளம்)-ல், விசாக்கள் குறைவான எண்ணிக்கையில் தான் கிடைக்கும்.

நிலை 2 (சற்று அதிக சம்பளம்)-ல், விசாக்கள் சற்று அதிக எண்ணிக்கையில் கிடைக்கும்.

நிலை 3 (அதிக சம்பளம்)-ல், அதிக விசாக்கள் கிடைக்கும்.

நிலை 4 (மிக அதிக சம்பளம்)-ல், மிக அதிக எண்ணிக்கையில் விசாக்கள் கிடைக்கும்.

இந்த நடைமுறையில் அதிக சம்பளம் பெறும் நிலை 3 மற்றும் 4-ஐ சேர்ந்தவர்கள் விசா பெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.

இதன் மூலம், மிகக் குறைந்த ஊதியப் பிரிவில், ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவிற்குள் வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தான் இந்த நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது அமெரிக்க அரசு.

மால்டோவாவை ஆக்கிரமிக்க ஐரோப்பா திட்டமா? - ரஷ்யா குற்றச்சாட்டின் பின்னணி என்ன?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவாவை மேற்குலக நாடுகள் ஆக்கிரமிக்கப் போவதாகவும் அதற்கான நேட்டோவின் படை உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்துக்கு வர தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு உளவு அமைப்பு (SVR) தெரிவ... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி! - இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

டொனால்ட் ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி என்றால் நீங்கள் நம்புவீர்களா? இலுமினாட்டி எனும் சதிகோட்பாட்டை நம்புபவர்கள் கூட ட்ரம்பை இலுமினாட்டி சங்கத்தின் உறுப்பினர் என நம்ப மாட்டார்கள் .எப்படி ட்ரம்பை இலுமினாட்ட... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" - பிரான்ஸ் அதிபரின் ட்விஸ்ட்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில், 65000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் உலக... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க