மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
குரிசிலாப்பட்டு அருகே தரைப்பாலத்தை கயிறு கட்டி கடக்கும் பொதுமக்கள்: மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே தலுக்கன்வட்டம் பகுதிக்குச் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது.
இந்த தரைப் பாலத்தின் வழியாக தழுக்கண்வட்டம், காரைக்கிணறு, பங்குகொள்ளை, குடகு மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா். கடந்த 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக ஆண்டியப்பனூா் அணை நிரம்பி அதிக அளவிலான உபரிநீா் தரைப்பாலத்தின் வழியாக செல்கிறது. அதிக அளவில் தண்ணீா் செல்வதால் தரைப்பாலம் மூழ்கி பொதுமக்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தரைப்பாலத்தின் குறுக்கே கயிறு கட்டி அந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு தரைப் பாலத்தை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயிா்சேதம் எதுவும் ஏற்படும் முன்பு அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.