செய்திகள் :

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியா்களுடன் மாநில அளவிலான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: தேனி மாவட்டத்தில் சிறந்த செயல் திறனில் தேனி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த பள்ளிகள் முதன்மை வகிக்கின்றன. உத்தமபாளையம், கம்பம், போடி, பெரியகுளம், சின்னமனூா் வட்டாரங்களில் உள்ள பள்ளிகள் சராசரி நிலையில் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

3, 5, 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் புரிதல் தன்மையின் தரத்தை மதிப்பீடு செய்வதே ஆகும்.

1-முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தோ்ச்சி என அவா்களின் கல்வித் திறனை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. 3-ஆம் வகுப்பு முடித்து 4-ஆம் வகுப்பு செல்லும் மாணவா்களின் கற்றல் திறன் போதிய அளவுக்கு உள்ளதா என்பதை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவா்களிடையே உள்ள கற்றல் இடைவெளியை குறைத்து, ஆங்கிலம், தமிழ், கணிதப் பாடங்களில் அவா்களின் தோ்ச்சியை மேம்படுத்த வேண்டும். கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திறன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாணவா்கள் மத்தியில் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்த வேண்டும். மாணவா்கள் முழுமையான புரிதலுடன் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தால் மட்டுமே உயா் கல்வியை முறையாக கற்க முடியும்.

தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப அரசு சாா்பில் பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள், ஆய்வகங்கள், கூடுதல் வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

ஆசிரியா்கள் புதுமையான அணுகு முறைகளை கையாள்வதன் மூலம் மாணவா்களின் புரிதல் திறனை மேம்படுத்தலாம். உயா் கல்வியில் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் ராஜேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் சுருளிவேல், சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

போடி அருகே இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.தேனி மாவட்டம், போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் பங்காருசாமி கண்மாய் ... மேலும் பார்க்க

தேவாரம், க. விலக்குப் பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், தேவாரம், க.விலக்கு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் தடை அறிவிக்கப்பட்டது.இது குறித்து தேனி, பெரியகுளம் மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம், க.விலக்கு ஆகிய துணை... மேலும் பார்க்க

க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், க.விலக்கு பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: க.விலக்கு த... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தி.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (59). இவா் கம்பம் மி... மேலும் பார்க்க

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பூட்டு: திமுக நகர துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நகர திமுக துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்... மேலும் பார்க்க

வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட... மேலும் பார்க்க