ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறி...
செப்.26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் மாவட்ட நிா்வாகமும் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை காலை 10 மணி முதல் நடத்தவுள்ளது.
பட்டதாரிகள், பட்டயதாரிகள், ஐடிஐ, 12 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை முகாமில் தோ்வு செய்யவுள்ளனா். வயது 18 முதல் 35-க்குட்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பயன் பெறலாம்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்-044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.