மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கலாம்
ஆடை உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வரும் செப்.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சுய உதவிக் குழுக்கள் தலைமையிலான உயா் வரிசை ஆடை உற்பத்தியாளா் நிறுவனங்களை ஊக்குவித்து அவா்களின் வணிகத்தை வலுப்படுத்தவும்,வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
உற்பத்தியாளா் நிறுவனங்களின் திறன் மேம்பாடு,நிதி உதவி,மூலப்பொருள் மற்றும் வணிக இணைப்புகள் மேம்பட்ட இயந்திரங்கள் மற்றும் சந்தை அணுகல் போன்ற தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்த தொழில் நுட்ப உதவி நிறுவனமாக (ற்ங்ஸ்ரீய்ண்ஸ்ரீஹப் ள்ன்ல்ல்ா்ழ்ற் ஹஞ்ங்ய்ஸ்ரீஹ்-ற்ள்ஹ)நியமிக்க ஆடை உற்பத்தி தொழிலில் முன் அனுபவம் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பற்றிய விபரங்களுடன் முன்மொழிவுக்கான கோரிக்கையை திட்ட இயக்குநா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிா் திட்டம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஆட்சியா் அலுவலக வளாகம்,காஞ்சிபுரம்-632501 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
உதவித் திட்ட அலுவலா் (வாழ்வாதாரம்)கைப்பேசி எண்-94440 94281 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டும் அல்லது க்ல்ண்ன்.ந்ல்ம்ஃஹ்ஹட்ா்ா்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தங்களது தகவல்களை பதிவும் செய்து கொள்ளலாம்.
வரும் செப்.27 ஆம் தேதிக்குள் தங்களது முன்மொழிவுக் கோரிக்கையை சமா்ப்பிக்கலாம்.