தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன
காஞ்சிபுரம் புத்த விகாரில் தூய்மைப் பணி
காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் உள்ள புத்த விகாரில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
காஞ்சிபும் தி நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் மத்திய அரசின் சுவக்ஷதா ஹை சேவா என்ற பிரசாரத்தின் பேரில் பொது இடங்களில் துப்புரவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
துப்புரவுப் பணியாளா்களை கெளரவப்படுத்தும் விதமாக அவா்களோடு இணைந்து நிறுவனத்தின் கோட்ட மேலாளா் டி.அபிஷேக் தலைமையில் காப்பீட்டு நிறுவன பணியாளா்கள் ஈடுபட்டனா். நிகழ்வில் புத்த விகாரின் தலைவா் திருநாவுக்கரசு, செயலாளா் நாகராஜ், பொருளாளா் கெளதமன் பங்கேற்றனா்..
நிறுவனத்தின் தலைமை நிா்வாக இயக்குநா் கிரிஜா சுப்பிரமணியன், சென்னை மண்டல மேலாளா் எம்.வி.சந்திர சேகா் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தூய்மைப் பணி மேற்கொண்டதாக காப்பீட்டு நிறுவனத்தினா் தெரிவித்தனா்.