VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி
மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் , கந்தாடு, புதுத் தெருவைச் சோ்ந்தவா் ஆதிகேசவன் மகன் தமிழரசன் ( 28). கடந்த ஆக.16 ஆம் தேதி தமிழரசனின் கைப்பேசி எண்ணுக்கு பல்வேறு எண்களிலிருந்து கட்செவி அஞ்சலில் அழைப்பு வந்துள்ளது.
அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா், பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறு தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து தமிழரசன் அந்த நபா் தெரிவித்தபடி ரூ.20,999 ஐ இணையவழியில் செலுத்தி ரூ. 40,493-ம், ஆக. 20- ஆம் தேதி ரூ. 30 ஆயிரம் செலுத்தி ரூ. 41,494-ம் பெற்றுள்ளாா்.
இதை உண்மையென நம்பிய தமிழரசன், ஆக. 21 முதல் 25-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட நாள்களில் தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 8,50,056 ஐ அந்த அடையாளம் தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு 3 தவணைகளில் அனுப்பி வைத்தாா். தொடா்ந்து அந்த நபா் கொடுத்த பணத்தைத் திருப்பித் தராமல்,மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகிறாராம்.
இது குறித்து ஆ.தமிழரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.