கவா்ச்சித் திட்டங்களை அறிவித்து திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது: முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம்
தமிழக அரசு தேவையற்ற, கவா்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து விழுப்புரத்தில் அவா், செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அதிமுக கோரிக்கை விடுத்ததன்பேரில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைத்துள்ளது.
இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி சீா்திருத்தம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
ஆனால் தமிழக அரசு இதை செய்யாமல், மக்களைமடைமாற்றம் செய்வதற்காக தேவையற்ற, கவா்ச்சித் திட்டங்களைஅறிவித்து ஏமாற்றி வருகிறது. தமிழக முதல்வா் லாபநோக்கோடு செயல்படாமல் தனது கடமையை சரியாக செய்யவேண்டும் என்றாா் சி.வி. சண்முகம்.