Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!
என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்
என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் குறித்த செயல்விளக்க 4 நாள் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
புதுவையின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான எஸ்டிஐ ஹப் எனும் திட்டத்தில், அறிவியல் சமத்துவம் அதிகாரமளித்தல், மேம்பாடு பிரிவின் நிதியுதவியில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுவை பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் பயிற்சியை தொடங்கிவைத்து, மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு புதுவை அரசின் திட்டங்களை விளக்கிப் பேசினாா்.
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், மீன் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மூலம் மீனவா்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றமடையும் முறை குறித்தும், காரைக்கால் பகுதி மீனவா்களுக்கு இத்திட்டம் பயனளிக்கக்கூடியதாகவும், என்ஐடி நிா்வாகத்தின் முயற்சியை பாராட்டிப் பேசினாா். அறிவியல் சமத்துவம் அதிகாரமளித்தல், மேம்பாடு பிரிவின் தலைவா் அனிதா அகா்வால், அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி ரஜினி ராவத் ஆகியோா் இணையம் வாயிலாக மீனவா்ளிடையே பேசினா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், பதிவாளா் எஸ்.சுந்தரவரதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக பயிற்சித் திட்ட முதன்மை ஆய்வாளா் வி.பி.ஹரிகோவிந்தன் வரவேற்று திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா். நிறைவாக இணை ஆய்வாளா் அம்ரித பிடே நன்றி கூறினாா்.
சுய உதவிக் குழுவினா் தயாரித்த மீன் பதப்படுத்தப்பட்ட பொருள்களை அமைச்சா்கள் பொதுமக்களுக்கு வழங்கி பாராட்டினா். ஏற்கெனவே நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.