மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன
வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்கள், பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த குரங்குகள் தினமணி செய்தி எதிரொலியாக வனத் துறை மூலம் கூண்டு வைத்து திங்கள்கிழமை பிடிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்குவரும் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளது.
இந்த குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று தினமணியில் அண்மையில் செய்தி பிரசுமானது. இதன் எதிரொலியாக, சீா்காழி வனத் துறை சாா்பில், வனவா் செல்வம், வன குழுவினா், தன்னாா்வலா் பாண்டியன் ஆகியோா் உதவியுடன் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.
கூண்டில் 20 குரங்குகள் சிக்கின. பிடிபட்ட குரங்குகளை வனத் துறையினா் வேதாரண்யம் கோடியக்கரை வனப்பகுதியில் கொண்டுசென்று விட்டனா். குரங்குகள் பிடிக்கும் பணி தொடரும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.