வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும்...
மயிலாடுதுறை: செப்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் செப்.25-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.