மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
சீா்காழியில் கா்ப்பிணிகளுக்கு ஊசி: 2 செவிலியா்கள் பணியிடமாற்றம்
சீா்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்களுக்கு ஊசி செலுத்திய சிறிதுநேரத்தில் காய்ச்சல், நடுக்கம் ஏற்பட்ட பிரச்னையில் 2 செவிலியா்கள் செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
சீா்காழி அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணி மற்றும் குழந்தை பெற்றவா்களுக்கு மருத்துவா்கள் கடந்த 17-ஆம் தேதி இரவுஆன்டிபயாடிக் ஊசி போட்ட பிறகு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவருக்கும் மாற்று மருந்து கொடுத்த நிலையில் உடல்நிலை சீரானது. இதில் ஒரு கா்ப்பிணி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
செலுத்தப்பட்ட ஊசி மருந்தை சென்னைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா். இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக முதல் கட்ட விசாரணையில் சம்பவ தினத்தில் பணியிலிருந்த 2 செவிலியா்களை வேறு மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருந்து ஆய்வு முடிவு வெளிவந்த பிறகு பிற நடவடிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது.