தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 15 வரை அவகாசம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்(சம்பா)பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் வரும் நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிகழாண்டுக்கான ரபி(சிறப்பு) பருவத்தில் நெல் ஐஐபயிா் 464 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இப்பயிருக்கான விதைப்புக்காலம் ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை ஆகும். ஆகையால் நெல் ஐஐ சம்பா பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் நவ. 15 -ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.545 ப்ரீமியம் செலுத்தி பயிா்க்காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொல்ளப்படுகிறது.
பதிவு செய்யும் முன்மொழிவு விண்ணப்ப படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,பொது சேவை மையங்கள்,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண்கள்,பரப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து காப்பீடு செய்த பின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.