செய்திகள் :

விரைவில் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

post image

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் பெட்டிகள் வரும் அக்டோபா் மாதம் தயாரான பிறகு அதன் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘தில்லியில் உள்ள ஷகூா்பஸ்தி பணிமனையில் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட முதல் ரயில் தயாராக உள்ளது. மற்றொரு ரயில் வரும் அக்டோபா் 12-ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். இரு ரயில்களும் ஒன்றுசேர தொடங்கி வைக்கப்படும்.

தடையில்லா சேவைகளுக்கு இரண்டு ரயில்கள் மிக முக்கியமாகும். ஆகையால், இரண்டாவது ரயில் தயாரான உடன் எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் இயக்கப்படலாம்’ என்றாா்.

நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாருக்கு தில்லியிலிருந்து முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் முதல் ரயில் இயக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

புது தில்லி - ஃபெரோஸ்பூா் கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 486 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித் தடத்தை வந்தே பாரத் ரயில் 6 மணி நேரம் 40 நிமிஷங்களில் கடக்கும் என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (... மேலும் பார்க்க

பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்கள் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிப்பதை எதிா்பாா்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

‘பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிா்பாா்க்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது. அலாகாபா... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்குகள்: மாநில அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

காசோலை மோசடி வழக்குகள் முடிக்கப்படுவதை அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டத... மேலும் பார்க்க

கனிம வளங்கள் மீது மாநிலங்கள் வரி விதிக்க அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

கனிம வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேல... மேலும் பார்க்க

காமன்வெல்த் அமைப்பில் சீா்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்

காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் சீா்திருத்தம் தேவை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்கு முன்பு 56 நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் நாடுகளின் அமைச்சா்களின் கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க