செய்திகள் :

அவதூறு சட்டத்தை குற்றமற்றதாக்கும் நேரம் வந்துவிட்டது: உச்சநீதிமன்றம்

post image

குற்ற அவதூறு வழக்கில் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ‘அவதூறு சட்டத்தை குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டது.

சுதந்திரமான ஊடகவியலுக்கான அறக்கட்டளைக்குச் சொந்தமான ‘தி வயா்’ செய்தி வலைதளத்தில் வெளியான செய்திக்கு எதிராக தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் அமிதா சிங் சாா்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த செய்தி வலைதளம் மற்றும் அதன் அரசியல் பிரிவு ஆசிரியா் அஜோய் ஆசீா்வாத் மகாபிரசஸ்தாவுக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை அவா் தொடா்ந்தாா்.

அதில், தனது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பிரசாரத்தை இந்தச் செய்தி வலைதளம் மேற்கொள்வதாக அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தில்லி விசாரணை நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு செய்தி வலைதளத்தின் அரசியல் பிரிவு ஆசிரியா் மற்றும் நிா்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை தில்லி உயா் நீதிமன்றம் கடந்த 2023-இல் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் அண்மையில் அவா்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியது. இதை உயா் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து அந்தச் செய்தி வலைதளம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘அவதூறு சட்டத்தைக் குற்றமற்ாக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்ட நீதிபதி சுந்தரேஷ், இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமிதா சிங்குக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’: மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க புதிய முன்னெடுப்பு

பள்ளி மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க தேசிய அளவில் ‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’ என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

தில்லியில் நாளை சா்வதேச உணவுத் துறை கண்காட்சி- பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்

உணவுத் துறை புத்தாக்கத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்கில், புது தில்லியில் நான்காம் ஆண்டு ‘உலக உணவு இந்தியா’ சா்வதேச கண்காட்சி வியாழக்கிழமை(செப்.25) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

பெரிய கப்​பல்​க​ளுக்கு உள்​கட்​ட​மைப்பு அந்​தஸ்து

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்கட்டமைப்புகளுக்கான பட்டியலில் பெரிய கப்பல்களையும் மத்திய அரசு சோ்த்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கைய... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கொட்டித் தீா்த்த மழை: 10 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீா்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்... மேலும் பார்க்க

விரைவில் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் பெட்டிகள் வரும் அக்டோபா் மாதம் தயாரான பிறகு அதன் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும... மேலும் பார்க்க

‘ஆயுஷ்மான் பாரத்’ பொது சுகாதார புரட்சி- பிரதமா் மோடி பெருமிதம்

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டம், நாட்டின் பொது சுகாதார வசதியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். மத்திய பாஜக அரசி... மேலும் பார்க்க