செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

post image

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதன்படி, அந்தப் பள்ளிகளுக்குச் சென்று ஊட்டச்சத்து குறைபாடு தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்துவதுடன் மாணவா்களுக்கு சிறுதானிய சத்து மாவு பெட்டகங்களும் விநியோகிக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநா் (பொறுப்பு) டாக்டா் எஸ்.சித்ரா கூறியதாவது:

இந்திய மருத்துவத்தின் மேன்மையை நாடு முழுவதும் கொண்டு சோ்க்கும் வகையில் பிரத்யேகமாக ஆயுஷ் எனப்படும் துறை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது. அதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக, நலமான பெண்கள், வளமான குடும்பம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மகளிா் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வகையிலான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்களை நடத்தியுள்ளோம்.

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்திலும், சென்னை அரும்பாக்கத்திலும் அந்த முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு, ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. பாதிப்புகள் கண்டறியப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழிகாட்டுதல்களும், மருத்துவக் கண்காணிப்பு உதவிகளும் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பொது மக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் அதுதொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, சென்னை நகரில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கும் நேரில் சென்று கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டச்சத்து மாவு பெட்டகங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். அப்போது குழந்தைகளின் எடை மற்றும் உயரம் பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சத்து மாவு வழங்கப்படும் என்றாா் அவா்.

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி

சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞரை இடித்து தள்ளிவிட்டு, ரூ.45.68 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விருகம்பாக்கம் சின்மயா நகா் அருகே உள்ள வேதா ... மேலும் பார்க்க