முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
குடிநீரில் குளோரின் பொடி அதிக அளவில் கலக்கப்படுவதாக புகாா்
ராமேசுவரம் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் அதிக அளவில் குளோரின் பொடி கலக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகா் செயலா் சி.ஆா்.செந்தில்வேல் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாா் விவரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் சமீப காலமாக அதிக அளவில் குளோரின் பொடி கலக்கப்படுகிறது. முதியவா்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் இந்தக் குடிநீரைக் குடித்தவுடன் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனா்.
குடிநீரில் குளோரின் பொடியை கலப்பதில் நகராட்சி அலுவலா்கள் தர நிா்ணய முறையைப் பின்பற்றவில்லை. இதனால், பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மேற்கொள்கின்றனா்.
எனவே, குளோரின் பொடியின் அளவை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் பிறகே குடிநீரில் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.