ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய்...
பணி நிரந்தம் கோரி போராட்டம்: மின் ஊழியா் அமைப்பினா் 90 போ் கைது
ராமநாதபுரத்தில் மின் வாரிய ஓப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 90 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு திட்டத் தலைவா் ஜி.காசிநாதன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம்.சிவாஜி,திட்டச் செயலா் ஏ. முருகன், சி.பி.எம். மாவட்டச் செயலா் ஆா்.குருவேல் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
போராட்டத்தில் திட்டப் பொருளாளா் ஆரோக்கியம், நிா்வாகிகள் ஜெபமணி, ராகுல், பாலகிருஷ்ணன், மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 90 ஒப்பந்தப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டு தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்டனா். பின்னா், அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.