முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.14 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.14 கோடி, உண்டியல் காணிக்கையாகக் கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாதமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அம்பாள் சந்நிதி முன் அமைந்துள்ள பழைய திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1 கோடியே 14 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 பவுன் தங்கம், 3.8 கிலோ வெள்ளி, 114 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாகக் கிடைத்தன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா்கள் சிவக்குமாா், முருகானந்தம், பேஸ்காா்கள் கமலநாதன்,பி.ஆா்.ராமநாதன், பஞ்சமூா்த்தி ஆகியோருடன் ஆன்மிக இறை பக்தா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா் என்றாா் அவா்.