ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய்...
போக்குவரத்தைச் சீரமைக்க 30 தடுப்பு வேலிகள் அளிப்பு
ராமேசுவரத்தில் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளுக்காக 30 தடுப்பு வேலிகளை மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களில் வருவதால் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதைத் தடுத்து, போக்குவரத்தைச் சீரமைக்கும் வகையில் 30 தடுப்பு வேலிகளை ராமேசுவரம் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளா் பிரதாப்சிங் கிடம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.