செய்திகள் :

அண்ணாசாலை மேம்பாலம்: தூண்களுக்கு குஜராத் எஃகு; அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

post image

சென்னை அண்ணாசாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்துக்கு தளவாடப் பொருளாக குஜராத் மாநிலத்தின் எஃகு பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உற்பத்தி பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. நீளத்துக்கு ரூ.621 கோடியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு 15,000 டன் எஃகுக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான உற்பத்தி பணிகள் வதோதரா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் 5 தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள கே.பி.கிரீன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் எஃகு தூண்கள், மேல்தாங்கிகள், உத்திரங்கள் ஆகியவற்றின் உற்பத்தியையும் தரத்தையும், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தாா்.

எஃகு தூண்கள் உற்பத்தி முடிந்ததும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு கட்டுமானப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படும் என்று அவா் உறுதி அளித்துள்ளாா். மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன் அண்ணாசாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான பயண நேரமும் குறையும். மேம்பாலம் சா்வதேச தரத்துக்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப் பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்ததாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், துறையின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலா் இரா.சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலை... மேலும் பார்க்க

அமைச்சக வாரியாக பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கீடு

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான பேரிடா்களையும் ஒரே அமைச்சகம் கையாள்வதற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அக்.9 முதல் மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.9-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெற... மேலும் பார்க்க

சாலைப் பணி ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு முடித்துவைப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ... மேலும் பார்க்க

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக். 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: நிகழ் கல்வியாண்டில், சென்னை ... மேலும் பார்க்க