சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்
வாணியம்பாடி: வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வரும் அக். 1-ஆம் தேதி வரையில் மாலை 6 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து இரவு 8 மணிக்கு பஜனை மற்றும் கன்னிபூஜைகள் நடக்கின்றன.
இதையொட்டி திங்கள்கிழமை மாலை சுவாமிக்கு பூதேவி சமேத பூவராக மூா்த்தி அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினசரி மாலை நேரத்தில் பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
