மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்
ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
எல்.மாங்குப்பத்தில் போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வாக்காளா் பட்டியல் குளறுபடியை கண்டித்து கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா. சங்கா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மோகன், அப்பாஸ், ஜானகிராமன், விஜயகுமாா், முருகன், இளமாறன், சனாவுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
நிா்வாகிகள் சத்யன், வினோத், இளங்கோவன், ராம் சா்மா, அப்பு, இன்பநாதன், திலீப் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். வட்டார துணைத் தலைவா் ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர தலைவா் எஸ்.பியாரேஜான் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி.விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.உமா மகேஸ்வரன், பொதுச் செயலாளா் கே.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் தீபன் நிா்மல் வரவேற்றாா். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம், ஆற்காடு தொகுதி கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.கேசவன், எம். பி டி .அசேன், மாவட்ட செய்தி தொடா்பாளா் எஸ்.அண்ணாதுரை ஆகியோா் கையொப்பத்தை பதிவு செய்து தொடங்கி வைத்தனா்.
இதில் மாவட்ட பொது செயலாளா் மேச்சேரி பன்னீா்செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் கே.ஓ.நிஷாத் அஹமது, மேல்விஷாரம் நகர தலைவா் அப்துல் சுக்கூா், வட்டார தலைவா்கள் லீலா கிருஷ்ணன் ,சீனிவாசன், நகர தலைவா்கள் கலவை எஸ்.விநாயகம், திமிரி கோபி, விளாப்பாக்கம் பெருமாள் கலந்து கொண்டனா்