"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவதா"...
ஆஸி. ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ஏ!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ மற்றும் ஆஸி. ஏ அணிகள் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டி சமனில் முடிய, இரண்டாவது போட்டியில் ஆஸி. ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தத் தொடருக்கு அடுத்து 3 ஒருநாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டிகள் செப்.30, அக்.3, அக்.5 ஆம் தேதிகள் நடைபெற இருக்கிறது.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.
முதல் ஒருநாள் போட்டிக்கான இந்தியா ஏ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரல் (கீப்பர்), பிரியன்ஸ் ஆர்யா, சிமர்ஜீத் சிங்.
2-ஆவது, 3-ஆவது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (கீப்பர்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், அபிஷ்ரேல் சிங், அபிஷ்ரேல் சிங், (கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.