செய்திகள் :

சூப்பா் 4 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பா் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி வெற்றது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான சூப்பா் 4 சுற்றில் இந்தியா - வங்கதேச அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை கிரிக்கெட் திடலில் இன்று மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணியின் பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினார். அபிஷேக் நிதானமாக துவங்கினாலும், கில் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும், 19 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து வெளியேற திடீரென மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் துபே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஆடிய அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக காட்டிய அதிரடியை இங்கும் தொடர்ந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.

அடுத்தவந்த கேப்டன் சூர்யா, திலக் வர்மா இருவரும் தலா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய ஹார்திக் பாண்டியா சில பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். முடிவில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.

இந்தியாவுடன் தோற்றதால்... மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!

வங்கதேச அணித்தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 169 ரன்களை இலக்காக கொண்டு வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் சைஃப் ஹாசன் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக விளையாடிய அவர் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

19.3 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 4 அணிகள் மோதும் ஆசியக... மேலும் பார்க்க

இறுதிக்குச் செல்லுமா இந்திய அணி! வங்கதேசம் பந்துவீச்சு!

ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.Will the Indian team make it to the final? Bangladesh bowling! மேலும் பார்க்க

இந்தியாவுடன் தோற்றதால்... மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!

இலங்கை அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்ற பாகிஸ்தான் வீரர் ஹுசைன் தலத் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதினால் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை எனக் கூறியுள்ளார். முத... மேலும் பார்க்க

சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!

இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் 19 வயதுக்... மேலும் பார்க்க

இந்திய கேப்டனின் கிண்டல்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கூறியதென்ன?

பாகிஸ்தான் அணி குறித்த இந்திய கேப்டனின் கிண்டலான கருத்துக்கு அந்நாட்டின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ஃரிடி பதிலளித்துள்ளார். சூர்யகுமாரின் கருத்து அவருடையது எனப் பொறுமையாக பதிலளித்துள்ளார். இந்த... மேலும் பார்க்க

லெஜன்ட்ரி கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்!

இங்கிலாந்தைச் சேர்ந்த லெஜன்ட்ரி நடுவர் ஹரால்டு டிக்கி பேர்ட் செவ்வாய்க்கிழமை(செப்.23) காலமானார். அவருக்கு வயது 92.கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தைச் சேர்ந்த நடுவர் டிக்கி பே... மேலும் பார்க்க