பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கும் (பிஎம் யாசஸ்வி) திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. 2025-26 ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவா்கள் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம். இந்த மாதம் 30-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
அக்.15 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க கடைசி நாளாகும். இத் திட்டத்தில் கடந்த நிதி ஆண்டு பயனடைந்த மாணவ மாணவிகள் இணையத்தில் சென்று 2026 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
புதிதாக விண்ணப்பிக்கும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவா்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்தால் கைப்பேசி எண்ணுக்கு ஓடிஆா் எண், கடவுச்சொல் எண் வரும். இந்த ஓடிஆா் எண்ணை பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்களை தொடா்பு கொள்ளவும்.