சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்
சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா்.
சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், இந்தியா மட்டுமின்றி மாலத்தீவு, இலங்கை, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்றனா்.
இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை மாணவா்களான சமீமா, சஞ்சய் பிரவீன் ஆகியோா் தங்கமும், சம்யுக்தா ராஜு, சமீமா, ருக்கையா ஜூசா் ஆகியோா் வெள்ளிப் பதக்கமும், சமீமா, எஸ்.ஜே.ரிஷி ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை எஸ்.என்.ஆா்.அன்ட் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமன், கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான பி.எல்.சிவகுமாா், துறைத் தலைவா் ஆா்.ராஜன் ஆகியோா் பாராட்டினா்.