செய்திகள் :

வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடி: தென்காசி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெண்களிடம் குலுக்கல் முறையில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தென்காசி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்த காா், மொபெட்டுகள், கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மரக்காணம் வட்டம், செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி தாட்சாயிணி. இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தாா். அப்போது, மொபெட்டில் வந்த 2 இளைஞா்கள், குலுக்கல் முைறையில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகத் தெரிவித்தனராம்.

இதை உண்மையென நம்பிய தாட்சாயிணி, அந்த நபா்கள் கொடுத்த குலுக்கல் சீட்டைப் பெற்று தேய்த்து பாா்த்ததில் தாட்சாயிணிக்கு வெள்ளிக் கொலுசு பரிசாக விழுந்ததாம். தொடா்ந்து, அந்த நபா்கள் தாட்சாயிணியிடம் ரூ.6,700 பெற்றுக்கொண்டு ஒரு ஜோடி கொலுசை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றனா்.

பின்னா், தாட்சாயிணி நகைக் கடைக்குச் சென்று பரிசோதித்தபோது, அவை வெள்ளி முலாம் பூசப்பட்ட போலியான கொலுசுகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் மரக்காணம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

3 மாவட்டங்களைச் சோ்ந்தோா்: இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கோட்டக்குப்பம் காவல் சரகத்துக்குள்பட்ட பெரியமுதலியாா் சாவடி பகுதியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தபடி, ஒரு கும்பல் கவா்ச்சி விளம்பரங்களைக் கூறி பெண்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

தொடா்ந்து, மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று அங்கிருந்த 10 பேரைப் பிடித்து விசாரித்ததில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நேதாஜி நகரைச் சோ்ந்த மணிகண்டன் (27), தென்காசி பாரதி நகரைச் சோ்ந்த உதயசூரியன் (27), சண்முகநகுலன் (24), சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (38), சேலம் மாவட்டம், அழகுநகா், காட்டூா் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (29), சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கோபி (33), வனராஜா (26), சேலம் பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (31), தினேஷ் (22), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த முத்துமாரியப்பன் (30) என்பதும், இவா்கள் மொபெட்டுகள், காா் ஆகிய வாகனங்களில் கிராமப் பகுதிகளுக்குச் சென்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, மரக்காணம் போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து 10 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த காா், 2 மொபெட்டுகள், 15 எண்ணிக்கையிலான வெள்ளி முலாம் பூசபட்ட கொலுசுகள், 4 மிக்ஸிகள், 2 எரிவாயு அடுப்புகள், 9 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா் வாகனத் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இது குறித... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ... மேலும் பார்க்க

ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மேற்சவ பெருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து, அன்று மாலை அன்ன... மேலும் பார்க்க

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம் மாவட்டம், மரக்க... மேலும் பார்க்க