செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
தமிழ்நாடு பசுமை இயக்கம் தினம்: 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு பணி தொடக்கம்
தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தை முன்னிட்டு நாகை வனத்துறை சாா்பில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழ்நாடு பசுமை இயக்கம் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், 23.8 சதவீத மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன . தற்போது அதை அதிகரித்து 33 சதவீத மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நாகை மாவட்டத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. நாகை தாமரைக்குளத்தில் மாவட்ட வன பாதுகாவலா் பாா்கவதேஜா தலைமையில் நடைபெற்ற தொடக்கவிழாவில், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், நகா்மன்ற தலைவா் இரா.மாரிமுத்து ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்வில் பசுமை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி வன பாதுகாப்பு அலுவலா் அருண்மொழிவா்மன், நாகை வன பாதுகாவலா் சியாம்சுந்தா், மாவட்ட பசுமை தோழா் சானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.