செய்திகள் :

நவராத்திரி ஊர்வலத்தில் கத்திக் குத்து சம்பவம்: சிறுவன் உள்பட இருவர் கைது

post image

மத்திய தில்லியில் நடைபெற்ற நவராத்திரி ஊர்வலத்தின்போது இரு குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

தெற்கு தில்லியின் கல்காஜியிலிருந்து வடகிழக்கு தில்லியின் சீலம்பூர் நோக்கி இரு நவராத்திரி குழுக்கள் திங்கள்கிழமை இரவு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தன.

எம்ஜி சாலையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் அருகே யார் மற்றொருவரை முந்திச் செல்வது மற்றும் அதிக சப்தமுடன் ஒலி பெருக்கியில் இசை பாடிச் செல்வது தொடர்பாக இரு குழுக்களுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு இரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. மற்றொரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

இருவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸôர், ஐடிஓ முதல் ராஜ்காட் வரையில் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் வட கிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, கன்னையா (எ) விவேக் (21) என்ற நபரையும் 17 வயது சிறுவனையும் போலீஸôர் கைது செய்தனர். மோதலின்போது பயன்படுத்தப்பட்ட கத்தி கன்ஹையாவிடமிருந்து கைப்பற்றப்பட்டது. விசாரணையின்போது, தனது குற்றத்தை கன்னையா ஒப்புக்கொண்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.

உ.பி.யில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை:3 பேர் கைது

தில்லி காவல்துறை மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை முறியடித்து, உத்தர பிரதேசம் மொரதாபாதில் ஒரு ஆயுத உற்பத்திப் பிரிவையும் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவி... மேலும் பார்க்க

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில்... மேலும் பார்க்க

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிர... மேலும் பார்க்க

காவலர் மீது துப்பாக்கிச் சூடு : சிறுவன் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

தில்லி பல்கலை.யில் கூடுதல் சுற்று: மாணவர் சேர்க்கை தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான நேரடி கூடுதல் சுற்று (மாப்-அப்) மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.முதல் நாளில் 73 பிஏ ஹானர்ஸ் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க