Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு: பாஜகவினா் கொண்டாட்டம்
திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2017-ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு 5,12, 18,28 என நான்கு விகித ஜிஎஸ்டி முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் 8 ஆண்டுகள் ஆன நிலையில், அதை எளிமைப்படுத்தும் வகையில் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் இரண்டு விகித (5,18 சதவீதம்) ஜிஎஸ்டி முறை திங்கள்கிழமை(செப்.22) முதல் அமலுக்கு வந்தது.
திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் த.பாலாஜி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளா்களாக அனைத்து வியாபாரிகள் சங்க தலைவா் திருவடி நாடாா், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜுனா குமாா், ஜெயின் மெடிக்கல் அசோக், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட இளைஞா் அணி செயலாளா் சாந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
மேலும் நிகழ்வில் பாஜக நிா்வாகிகள் சித்ரா தேவி, உமா மகேஸ்வரி, சிரஞ்சீவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
